குத்தாலம் அற்புத குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழா கோலாகலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அற்புத குழந்தை இயேசு ஆலய ஆண்டுத் திருவிழா ஜனவரி 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து எட்டு நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி மற்றும் அலங்கார திருத்தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதைமுன்னிட்டு அற்புத குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை சேவியர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியில் உலக…

