பாதியிலே நிறுத்தப்பட்ட அரசு வீடுகள்: நரிக்குறவர் சமூக மக்கள் வேதனை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் பழங்குடி சமூக மக்களுக்கு, தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. எனினும், இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பயனாளிகள் நீண்ட காலமாக வீடுகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி, வட்டாட்சியர் உள்ளிட்ட…

