வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் ‘முகவரி இல்லாதவர்கள்’ எண்ணிக்கை கவலைக்கிடம்: ப.சிதம்பரம்
சென்னை:தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 26,32,672 பேர் இறந்தவர்கள் என்றும், 3,39,278 பேர் இரட்டைப் பதிவுகள் கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார். இந்த இரு காரணங்களையும் ஒரு அளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். ஆனால், 66,44,881 பேர் ‘முகவரி இல்லாதவர்கள்’ எனக் கூறி நீக்கப்பட்டிருப்பது தான் பெரும் நெருடலாக உள்ளது என…

