புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: 5 வயதுக்குட்பட்ட 74,698 குழந்தைகள் பயனடைவார்கள்
புதுவை : சிறு வயது குழந்தைகளை பாதிக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், இந்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி வருகிறது. உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் போலியோ நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், வரும் 21.12.2025 அன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது….

