2026 தேர்தல்: அதிமுக–பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக
சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே இறுதி பேச்சுவார்த்தை இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
பா.ம.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸ் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் அன்புமணி ராமதாஸ் . இதன் மூலம் ராமதாஸ் விஜய் உடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

