தவெக கட்சிக்கு ‘விசில்’ சின்னம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தேர்தல் தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என அவர் தெளிவாக அறிவித்துள்ளதால், வரவிருக்கும் தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தவெக கட்சிக்கு பொதுச் சின்னம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுச் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் ‘விசில்’ சின்னத்தில் போட்டியிட உள்ளனர். விஜய் தரப்பில் விசில், கால்பந்து, வெற்றி கோப்பை உள்ளிட்ட சின்னங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *