கரூர் சம்பவம்: சிபிஐ முன்பு மீண்டும் ஆஜராகும் விஜய்

கரூரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 12-ம் தேதி டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அடுத்த கட்ட விசாரணைக்காக மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விஜய் நேற்று டெல்லி சென்றுள்ளார். இன்று இரண்டாவது முறையாக சிபிஐ முன்பு அவர் ஆஜராக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *