“எனது திரை வாழ்க்கையை அழிக்க முயற்சி நடந்தது!” – நடிகர் திலீப் விடுதலைக்குப் பின் பேச்சு!
கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் திலீப் இன்று (டிசம்பர் 8, 2025) எர்ணாகுளம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு பொய் என்றும் தனது திரை வாழ்வை அழிக்க சதி நடந்ததாகவும் திலீப் வெளியான பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். மேலும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திலீப் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், அவருக்கு எதிராகப் போதிய ஆதாரம் இல்லை என்றும் கூறி அவரை விடுவித்தது. இந்த வழக்கில் வேண்டுமென்றே தன்னை சிக்கவைத்ததாகவும், தனது திரை வாழ்க்கையை அழிக்க ஒரு சதி நடந்ததாகவும் திலீப் குற்றஞ்சாட்டினார். தனக்காக வாதிட்ட வழக்கறிஞர்கள் மற்றும் ஆதரவு அளித்த நண்பர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி
மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முதன்மை குற்றவாளிகளான பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் திலீப் A8 குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திலீப் எர்ணாகுளம் நீதிம்னறத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளேன். இது உண்மையின் வெற்றி. எனது திரை வாழ்க்கையை அழிக்க முயற்சி நடந்தது. இந்த வழக்கில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

