மாஸ்கோ ஏஐ கண்காட்சியில் மனித வடிவ ரோபோ நடனமாடி புதினை வரவேற்ற காட்சி வைரல்
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) கண்காட்சியில், அதிபர் விளாடிமிர் புதினை மனித வடிவ ரோபோ ஒன்று நடனமாடி வரவேற்ற காட்சி இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்பெர்பேங்க், தங்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் நோக்கில் மாஸ்கோவில் இந்த ஏஐ கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அதற்கு சிறப்பு விருந்தினராக அதிபர் புதின் வருகை தந்தார்.
கண்காட்சிக்கு வந்த புதினை, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ‘கிரீன்’ என்ற மனித வடிவ ரோபோ நேர் சென்று வரவேற்றது. இதையடுத்து, அந்த ரோபோ அங்கு சிறிய அளவில் நடனமாட, அதிபர் புதின் அதை ரசித்து பார்த்தார்.
ரோபோவின் அசைவுகள் மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்து புதின் அங்கிருந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களிடம் ஆழமாக கேட்டு அறிந்தார்.
அதிபர் புதினை ரோபோ நடனமாடி வரவேற்ற இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, உலகம் முழுவதும் பேசுபொருளாகிவிட்டது.

