TVK Protest | தருமபுரி போராட்டத்தில் காவலரை கடித்த த.வெ.க. தொண்டர் கைது!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தனியார் பார் திறக்கப்பட்டதை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் தனியார் பார் நுழைவுவாயிலை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில், காவலர்கள் போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த த.வெ.க. தொண்டர் ஒருவர் தலைமை காவலர் அருள் என்பவரின் கையை நறுக்கென கடித்தார். இந்த நிலையில், தலைமை காவலரை கடித்த த.வெ.க. தொண்டர் ஜெமினி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

