ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு!
டெல்லியில் இருந்து ஹைதராபாத் நோக்கி பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்திற்கு பறக்கும் நடுவே வெடிகுண்டு இருப்பதாக அறியப்பட்ட மிரட்டல் தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு எச்சரிக்கை செய்தி கிடைத்ததைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை அவசர நடவடிக்கை எடுத்தது. ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் விமானம் முழுவதும் பாதுகாப்பு படையினரால் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு, வெடிகுண்டு எதுவும் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக விமான நிலைய பாதுகாப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் எங்கு இருந்து வந்தது? யார் செய்தது? என்பதனை அடையாளம் காண முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

