ஒரே பாறை, உலக சாதனை: 3,000 கி.மீ. பயணத்தில் உருவான மகா சிவலிங்கம்
பீகாரில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விராட் ராமாயணக் கோயில்’ திட்டத்தின் முக்கிய கட்டமாக, 33 அடி உயரம் கொண்ட பெரிய சிவலிங்கம் பீகாரை சென்றடைந்துள்ளது. இந்த சிவலிங்கம், தமிழகத்தின் மகாபலிபுரத்தில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நவம்பர் 21 அன்று மகாபலிபுரத்தில் தொடங்கிய இந்தப் பயணம், 96 சக்கரங்கள் கொண்ட சிறப்பு டிரக் மூலம் மெதுவாக கொண்டு செல்லப்பட்டது. சேதம் ஏற்படாமல் இருக்க, தினமும் 60 கி.மீ. மட்டுமே பயணிக்கப்பட்டது.
இந்த சிவலிங்கம் ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்டு, 1,008 சிறிய சிவலிங்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகள் உழைப்பில் உருவான இதன் எடை 210 டன். நிறுவப்பட்ட பின் 51 அடி உயரம் கொண்டு, உலகின் மிக உயரமான சிவலிங்கமாக போற்றப்படுகிறது .

