தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் கலாச்சார – பாரம்பரியத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக நடைபெற தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வருகின்ற ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த போட்டியில் பங்கேற்க உள்ள காளையர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது. வீரர்கள் டோக்கன்களை பெற முண்டியடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஜல்லிக்கட்டில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். முன்பதிவு முழுமையாக முடிந்தவுடன் உரிய மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிறகே போட்டிகள் நடைபெற உள்ளன.

