மதுரையில் புதிய மேம்பாலத்திற்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ பெயர் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரலாற்று பெருமை மிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் தியாகத்தையும், வீரத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த பெயரிடல் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, மேலமடை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்தை சீர்செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தும் இந்த சாலையில் மேம்பாலம் அமைந்ததன் மூலம், மதுரை நகரின் போக்குவரத்து கட்டமைப்பில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேம்பாலத்தின் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது, மேலும் அதனைத் தமிழக முதலமைச்சர் நேரடியாக திறந்து வைக்க உள்ளார்.

