பிரபல அனிமேஷன் தொடரான ‘அட்டாக் ஆன் டைட்டன்’ யூடியூப்பில் வெளியானது

உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அனிமேஷன் தொடர்களில் ஒன்றான ‘அட்டாக் ஆன் டைட்டன்’ (Attack on Titan) தற்போது அனைவரும் இலவசமாக பார்க்கும் வகையில் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடரின் அனைத்து சீசன்களையும் ‘முஸ் ஆசியா’ (Muse Asia) நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.

ஜப்பானிய ஆடியோவுடன், ஆங்கில சப்டைட்டில்களும் இணைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் எளிதில் ரசிக்க முடிகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள அனிமேஷன் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இதன்மூலம் கட்டணம் செலுத்தாமல், உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்த அனிமே தொடரை முழுமையாக பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *