LJK சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா | தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு உற்சாக வரவேற்பு
லட்சிய ஜனநாயக கட்சி (LJK) சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் உள்ள 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சித்தன்குடியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்க வந்த LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அவர் நேரில் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜோஸ் சார்லஸ் மார்டின், கல்வி தான் ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தும் முக்கியமான ஆயுதம் என குறிப்பிட்டார். “நீங்கள் அனைவரும் கல்வியில் முன்னேறி வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும். உலகின் எந்த பகுதியிலே சென்றாலும், நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்யும் மனப்பாங்குடன் செயல்பட வேண்டும்” என அவர் மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வரும் அண்ணன் ஜான்குமாரை பாராட்டிய அவர், இதுபோன்ற முயற்சிகள் சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
அரசியல் நிலவரம் குறித்து பேசிய LJK தலைவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயமாக புதுவையை சிங்கப்பூராக மாற்றி காட்டுவேன். அதற்காக உங்கள் அன்பும் ஆதரவும் அவசியம்” என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி, மாணவ-மாணவிகளிடையே உற்சாகத்தையும், கல்வி மீதான ஆர்வத்தையும் அதிகரித்ததாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

