LJK-வில் இணைந்த என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள்
புதுச்சேரி:
புதுச்சேரி இந்திராநகரைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் லட்சிய ஜனநாயக கட்சி (LJK) யில் இணைந்தனர்.
இவர்கள், LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளில் ஈர்ப்பு அடைந்ததாக தெரிவித்து, தங்களை அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைவு நிகழ்வின் மூலம், புதுச்சேரி பகுதியில் LJK கட்சியின் அமைப்பு மேலும் வலுப்பெறும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

