புதுச்சேரியில் காற்று மாசுபாடு கண்டறியும் கருவி மூலம் கண்காணிப்பு!
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றின் மாசுபாட்டை கண்டறிய மாசு கட்டுப்பாடு குழுமம் சார்பில் ஏர் மானிட்டர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வருகிற 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. தீபாவளிக்கு நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அதிக அளவு பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் நச்சுப் பொருட்கள் கலந்து காற்று மாசு ஏற்படுகிறது.
பட்டாசு வெடிக்கும் போது வெளியாகும் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு,போன்ற அமிலங்கள் அதிக அளவில் வெளியேறி காற்று மாசு படுவதால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் தீபாவளிக்கு முன்னர் 7 நாட்களும் தீபாவளிக்கு பின்னர் 7 நாட்கள் என 14 நாட்கள் காற்றின் தன்மையை அறியும் (ஏர் மானிட்டர்) இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி புதுச்சேரி முதலியார் பேட்டை இடையார்பாளையம் மற்றும் காரைக்கால் கோவில்பத்து ஆகிய மூன்று இடங்களில் காற்று மாசுபாட்டை அரியும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டது. இதன் மூலம் பத்து மைக்ரான் குறைவாக உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் கலப்பதை கண்டறிய முடியும்.
இதுகுறித்து இளநிலை அறிவியல் உதவியாளர் தமிழரசன் கூறும்போது…
புதுச்சேரியில் பட்டாசு வெடிப்பதற்கு நீதிமன்றங்கள் வழிகாட்டுதல் நெறிமுறையை அறிவித்துள்ளது நீதிமன்றம் அறிவித்த நேரத்தை விட அதிக அளவில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் மின் துகள்களின் அளவு நச்சு பொருட்கள் அதிக அளவில் வெளியேறுவதால் காற்று மட்டும் ஒலி மாசுபடுகிறது, இதனை கண்டறிந்து தீபாவளி முடிந்த பின்னர் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதன்படி இயந்திரங்கள் பொருத்தப்பட்டு காற்றின் மாசு குறித்து அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

