புதுவையில் விஜய் வருகை: அனுமதி குறித்து தெளிவில்லாமல் பதட்டம்
வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி புதுவையில் நடிகர் விஜய் பொதுமக்களை சந்திக்கிறார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த நிகழ்வுக்கு புதுவை காவல்துறையிடமிருந்து அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படாததால் நிகழ்ச்சியைச் சேர்ந்தவர்கள் உறுதிபடுத்த முடியாமல் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று மீண்டும் தமிழக பொதுச்செயலாளர் ஆனந்த், புதுவை ஐஜியை சந்தித்து நிகழ்ச்சி தொடர்பான முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். விஜயின் பொதுமக்கள் சந்திப்பு நடைபெறுமா, நடத்த அனுமதி கிடைக்குமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

