LJK தலைவர் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி
புதுவை அமெச்சூர் ரோல் பால் அசோசியேஷன் சார்பில், புதுவை வீரர்கள் வரும் 2025 ஜனவரி 29 முதல் ஜனவரி 1 தேதி வரை ஜம்முவில் நடைபெறவுள்ள 17வது ஜூனியர் நேஷனல் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேவையான ஊக்குவிப்பு மற்றும் பயணச் செலவுகளுக்காக, ஜர்சி மற்றும் பயண செலவுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிதியுதவியை அனுப்பி வைத்தவர் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள். நிகழ்வின் போது வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு, தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என ஊக்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விளையாட்டு ஆர்வலர்கள், அசோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

