தவெக பின்னால் திமுகவின் மறைமுக திட்டங்கள்

புதுவை மாநில தேர்தலில் NDA கூட்டணியில் இணைந்து LJK கட்சி போட்டியிடுகிறது, காமராஜ்நகர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

அதனையொட்டி பழனி வந்த அவர், திருஆவினன்குடி கோயிலில் உள்ள முருகப்பெருமான்
மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் தனது வேட்புமனுவை வைத்து சிறப்புப் பூஜைகளைச் செய்தார்.
தொடர்ந்து கோயிலில் விளக்கேற்றி சிறிது நேரம் தியானத்திலும் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் கூறினார்
திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும்
அதனால் தமிழகத்தை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றி விடலாம் போலத் தோன்றுகிறது என கூறினார்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசுகையில்,
“அரசியல் என்பது படம் எடுப்பது போன்றதல்ல. ஒரு வலுவான கூட்டணியில் இணையாமல் தனித்து நின்று வாக்கு சதவீதத்தை மட்டும் காட்டுவது வீண் செயல். விஜய்யின் கட்சிக்கு பின்னால் திமுக-வின் மறைமுகத் திட்டங்கள் இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது என தெரிவித்தார்.

மேலும், தவெக-வில் திமுக-வினர் ஊடுருவியுள்ளனர். குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி போன்றோர் தவெக-வை யாருடனும் கூட்டணி வைக்க விடாமல் தடுக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆதவ் அர்ஜுனா தனது அஜெண்டாவைச் சரியாகச் செய்து வருவதாகவும், விஜய்யை தனியாக நிற்க வைத்துத் தோற்கடிப்பதே திமுக-வின் திட்டமாகத் தெரிகிறது எனவும் ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *