புதுவையில் JCM மக்கள் மன்றத்தின் வேலை வாய்ப்பு முகாம் : 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு

புதுவை, பாகூர்:
புதுவை பாகூர் பகுதியில் அமைந்துள்ள மகரிஷி வித்யா மந்திர் CBSE பள்ளி வளாகத்தில் JCM மக்கள் மன்றம் சார்பில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில் இம்முகாம் நடத்தப்பட்டது.

10-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில், 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களின் தொழில் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முகாம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதுவை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

இந்த முயற்சியை முன்னெடுத்த சமூகச் சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் JCM மக்கள் மன்ற குழுவினருக்கு பங்கேற்ற இளைஞர்கள் நன்றியை தெரிவித்தனர். வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *