மின்துறை ஓய்வு பெற்ற உதவி பொறியாளர் LJK-வில் இணைவு
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதியைச் சேர்ந்த, விருப்ப ஓய்வு பெற்ற மின்துறை உதவி பொறியாளர் சகாயன், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார்.
இந்த சந்திப்பின்போது, கட்சியின் பொதுச் செயலாளர் துரைசாமி மற்றும் LJK நிர்வாகி ஜெ.ஜெ. ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். கட்சியின் கொள்கைகள் மற்றும் சமூக வளர்ச்சி நோக்கங்கள் தம்மை ஈர்த்ததால் LJK-வில் இணைந்ததாக சகாயன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சகாயன் இணைவால், உப்பளம் தொகுதியில் கட்சியின் அமைப்பு மேலும் வலுப்பெறும் என LJK வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

