லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த முன்னாள் ராணுவ வீரர், நடிகர் அசோக்பாண்டியன் இராமசாமி
முன்னாள் ராணுவ வீரரும், தமிழ் திரைப்பட நடிகருமான அசோக்பாண்டியன் இராமசாமி, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த சந்திப்பு நிகழ்வின்போது, JCM மக்கள் மன்றத்தின் துணைத் தலைவர் ரத்தினமும் உடனிருந்தார். அசோக்பாண்டியன் இராமசாமி கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு கட்சி சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும், அரசியல் மற்றும் சமூக சேவைகளில் அவர் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த இணைப்பு, லட்சிய ஜனநாயக கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

