ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை: ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்
புதுச்சேரி: புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மூலப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்காக, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
ஊர் கிராம முக்கியஸ்தர்கள் இளங்கோ தலைமையில், ஆலய கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடர்பாக ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்தனர். அப்போது, ஆலய திருப்பணி மற்றும் கும்பாபிஷேக பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டி அவர் இந்த நன்கொடையை வழங்கினார்.
இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு நன்றியை தெரிவித்தனர்.

