2026 ஐபிஎல் மினி ஏலத்தில் மேக்ஸ்வெல் பங்கேற்கவில்லை – அணிகளுக்கு அதிர்ச்சி

இந்தியா:
வரும் 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஆல் ரௌண்டர் கிளென் மேக்ஸ்வெல் தனது பெயரை ஏலத்துக்காக பதிவு செய்யாமல் இருப்பது அணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக ஐபிஎலில் முக்கிய ஆட்டக்காரராக விளங்கி வந்த மேக்ஸ்வெல், இந்த முறை ஏலப் பட்டியலில் இடம் பெறவில்லை. அவரது அனுபவமும், அதிரடி ஆட்டமும் காரணமாக பல அணிகள் அவரது பெயரை எதிர்பார்த்து இருந்தன. ஆனால் அவரது விலகல், அணிகளின் கணக்கீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், மேக்ஸ்வெல் மட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் சக்தி மிக்க வீரர் ஆன்றேர ரசலும் ஏலப் பட்டியலில் இல்லாதது கூட அணிகளுக்கு பெரிய பஞ்சத்தை உருவாக்கியுள்ளது. இவர்களது இல்லாமை, புதிய ஆட்டக்காரர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளைத் திறக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஆஸ்திரேலிய ஆல் ரௌண்டர் கேமெருன் கிரீன், இந்த முறை ஏலத்தில் பல அணிகளின் இலக்காக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. முன்னணி ஆல் ரௌண்டர்கள் இல்லாத சூழலில், கிரீனுக்கான போட்டியில் விலை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2026 ஏலம் எந்த வகையில் திசை திரும்பும் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *