மகளிர் பிரீமியர் லீக்: டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை

மகளிர் பிரீமியர் லீக் (WPL) T20 2026 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை எதிர்த்து அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற தொடரின் 3-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதிரடியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை குவித்தது. மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். அவருக்கு மற்ற வீராங்கனைகளும் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர்.

தொடர்ந்து, 196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் டெல்லி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *