“இந்தியா இந்து நாடு; பிரதமரும் இந்துவே” – சர்ச்சை கருத்து
மராட்டியத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓவைசி தெரிவித்த கருத்துகளுக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, எந்த குடிமகனும் பிரதமராக பதவியேற்க முடியும் என்றும், அதற்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியா ஒரு இந்து நாடு என்றும், இந்து நாகரிகத்தின் அடிப்படையில் வளர்ந்த நாடு என்றும் கூறிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்தியாவின் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக தெரிவித்தார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

