காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவர்ச்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நாளை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் 1,500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் த.வெ.க. தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சியில் வரும் பொதுமக்களின் மனுக்களை பெறுதல், அவர்களின் தேவைகளை கேட்பது உள்ளிட்ட செயல்பாடுகள் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

