ஒரே காரில் பயணித்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கே. ஏ. செங்கோட்டையன்!
அதிமுக வட்டாரத்தில் புதிய அரசியல் அலைகளை கிளப்பும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஒரே காரில் பயணித்தது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில், அதிமுகவினரை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி பேசியிருந்த செங்கோட்டையன், தற்போது பன்னீர்செல்வத்துடன் இணைந்து பயணம் செய்தது, அந்த கருத்தை வலுப்படுத்தும் அரசியல் அறிகுறியாக பலரும் கருதுகின்றனர்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு இருவரும் ஒன்றாக காரில் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம், அதிமுகவில் மீண்டும் ஒற்றுமை முயற்சி தீவிரமாவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது, எதிர்காலத்தில் அதிமுக அமைப்பின் திசையை மாற்றக்கூடிய முக்கிய அரசியல் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

