தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரப் பயணங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் மதுரையில் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்.
மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகே நடைபெற்றது . தொடக்கவிழாவில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல். முருகன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மாநிலம் முழுவதிலுமிருந்து பாஜக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் இந்நிகழ்ச்சியில், நயினார் நாகேந்திரன் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியின் குறைபாடுகள் குறித்து உரையாற்றினார்.
கரூரில் சமீபத்தில் நடந்த துயரச்சம்பவத்தை முன்னிட்டு, பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் இன்றைய பிரச்சாரம் நடைபெறுகிறது.