திருப்பூரில் முருகன் கோவிலில் போராட்டம்; 200 பேர் கைது
திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையம் அருகே குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முயற்சி செய்த போது, மக்கள் மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் தடுப்பு ஏற்படுத்திய நிலையில் இந்து முன்னணியினரும் போலீசாரும் மோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த மோதலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட சுமார் 200 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்குப் பின்னர், அப்பகுதியில் பதட்ட சூழல் நிலவியதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டனர். கோவில் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் இடிப்பை கண்டித்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

