புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி – LJK தலைவர் அறிவிப்பு
புதுவை , லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா, LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு , 500 மண் பானைகளில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். விழாவின் தொடக்கமாக, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குத்துவிளக்கேற்றி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் பழங்குடியின மக்களுடன் இணைந்து மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினார்.
விழாவில் தப்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பேசிய அவர், இந்த ஆண்டில் புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

