பழங்குடியின மக்களுடன் பொங்கல் விழா – குத்துவிளக்கேற்றி கொண்டாடிய LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரியில், பழங்குடியின மக்களுடன் இணைந்து LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். விழாவின் தொடக்கமாக அவர் குத்துவிளக்கேற்றி, மண் பானையில் பொங்கல் வைத்து விழாவை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். விழா முழுவதும் மகிழ்ச்சியும் ,உற்சாகமும் நிறைந்த சூழல் காணப்பட்டது.
பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக தப்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், கலாச்சாரத்தை பாதுகாக்கும் விழாவாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

