சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை: ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தும் நோக்கில், சென்னையில் கட்டப்பட உள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டினார்.
இந்த ஹஜ் இல்லம் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் கட்டப்படவுள்ளது. இதில் ஒரே நேரத்தில் சுமார் 400 ஹஜ் யாத்திரை பயணிகள் தங்கும் வகையில் தங்கும் அறைகள், அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான ஆதரவு அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இந்த திட்டம் நிறைவேறுவதன் மூலம், ஹஜ் யாத்திரை செல்லும் தமிழ்நாடு பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடம் கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

