நேற்று மார்கழி முதல் நாள் !
நேற்று மார்கழி முதல் நாள் ஆண்டாள் வேடமிட்டு பக்தி பரவசத்தில் தென் சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன்.
அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் -இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை பாடி அருளவல்ல பல்வலையாய் -நாடி நீ வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
இந்த பதிவில், ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களின் வரிகளை மேற்கோள் காட்டி, மார்கழி மாதத்தின் சிறப்பையும், பக்தி உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்…” என தொடங்கும் திருப்பாவை வரிகளை பகிர்ந்து, ஆன்மிக சிந்தனைகளுடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

