நவோதயா பள்ளிகள் விவகாரம்: தமிழக அரசு-மத்திய அரசு பேச்சுவார்த்தை அவசியம் – உச்சநீதிமன்றம்
புதுடெல்லி: இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு என்றும், அதனால் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பள்ளிகளை நிறுவுவதற்கான பொருத்தமான இடங்களை ஆறு வார காலத்திற்குள் கண்டறிய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், கல்வி சார்ந்த வளர்ச்சியை முன்னிறுத்தி, இரு அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை நீதிபதிகள் வலியுறுத்தினர்.
இந்த உத்தரவு, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.

