வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ்

பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

அமெரிக்க 2025 டிசம்பர் 5 அன்று, Netflix மற்றும் Warner Bros. Discovery (WBD) ஆகிய நிறுவனங்கள் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Warner Bros.-இன் திரைப்பட தொலைக்காட்சி ஸ்டுடியோக்களும், HBO Max / HBO ஓடிடி தளமும் புதிய ஒப்பந்தத்தின் கீழ் Netflix நிறுவனத்தின் சொந்தமாகும் என்று அறிவித்தன.

அதன் படி வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை, ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் Warner Bros.-இன் 100-ஆண்டு கால பாரம்பரியமும், ஹாலிவுட்டின் மிகப் புகழ்பெற்ற படங்கள் மற்றும் பிராண்டுகள் (DC Comics, Harry Potter, HBO நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை) Netflix-இன் உள்ளடக்கத் தளத்தின் ஓரமாக மாறக்கூடும்.

இதன் அடிப்படையில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள், ஹெச்.பி.ஓ. மேக்ஸ் (HBO MAX) ஓடிடி தளம், பிரபல டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவை அனைத்தும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *