“ஆண்கள் தினம் அப்படின்னு ஒன்று இருக்கா?” ஆண்ட்ரியாவின் கேள்வி, ரசிகர்கள் வேதனை!

சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு நடிகை–பாடகி ஆண்ட்ரியாவிடம் ஓர் சாதாரண கேள்வி கேட்ட செய்தியாளர் கூட, அந்த ஒரு கேள்வி இணையத்தில் எவ்வளவு ‘ரியாக்ஷன்’ உருவாக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை.ஆனால் ஆண்ட்ரியாவின் ஆச்சரியமும், சிரிப்பும், அதற்குப் பிறகு ரசிகர்கள் எழுதிய கமெண்டுகளும், இவை அனைத்தும் சேர்ந்து சமூக வலைதளத்தில் பெரிய கலகலப்பை உருவாக்கியுள்ளன.

அடடா… அப்படின்னு ஒரு தினமா இருக்கா?” – ஆண்ட்ரியாவின் நேரடி ரியாக்ஷன்

‘மாஸ்க்’ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் ஆண்ட்ரியாவிடம் சர்வதேச ஆண்கள் தினம் குறித்து கேட்ட போது, அவர் கண்களை பெரிதாக்கி,
“அப்படின்னு ஒரு தினமா இருக்கு?” என்று ஆச்சரியப்பட்டார். இந்த பதிலை பார்த்த ஆண் ரசிகர்கள் இணையத்தில்,“ நாங்க ரொம்பப் பாவப்பட்ட ஜென்மம்!
என்று நகைச்சுவையாகப் புலம்பும் கமெண்டுகளை மழையாய் எழுதிவருகிறார்கள்.

ஆண்கள் தினம் தெரியாதா? , என்று மீண்டும் ஆண்ட்ரியா விடம் கேட்டபோது

ஆண்ட்ரியா,“தந்தையர் தினம் கேட்டிருக்கேன்… ஆனா ஆண்கள் தினம் தெரியலை!” என்று சிரித்தபடி சொன்னார்.அதற்கு ஒருவர்:“மகளிர் தினம் உங்களுக்கு தெரிஞ்சுதே!”என்று நினைவூட்ட, உடனே ஆண்ட்ரியாவின் நகைச்சுவை பதில்: “பாவம் நாங்க… எத்தனை வருஷமா கஷ்டப்பட்டு வாழ்றோம். அதனாலதான் எங்களுக்கு ஒரு நாள் கொடுத்திருக்காங்க!”இந்த ஒரு வாக்கியம் நிகழ்ச்சி இடத்தையே சிரிப்பில் ஆழ்த்தியது.

மாஸ்க்’: நடிகை, வில்லன், தயாரிப்பாளர் – எல்லாவற்றிலும் ஆண்ட்ரியா

இப்போது திரைக்கு வந்துள்ள ‘மாஸ்க்’ படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடித்து ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார்.விகர்ணன் அசோக் இயக்கிய இப்படத்தில் கவின், ருஹானி ஷர்மா, சார்லி, பாலா சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வெற்றிமாறனுடன் இணைந்து தயாரிப்பாளராக அறிமுகமாகும் இவரின் புதிய படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

பாடகியாக தன் குரலால் ரசிகர்களை கவர்ந்தவர்,‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘தரமணி’ போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் நடிப்பிலும் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *