‘சிக்மா’ படத்தின் டீசர் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும்
இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘சிக்மா’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த படத்தின் டீசர், டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்போது ‘சிக்மா’ படம் பின் தயாரிப்பு பணிகளில் (Post Production) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான படமாக ‘சிக்மா’ உருவாகி வருவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, சந்தீப் கிஷன் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் ‘சிக்மா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. டீசர் வெளியீடு படத்தின் கதைக்களம் மற்றும் ஆக்ஷன் அம்சங்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

