கூடுவாஞ்சேரியில் போராட்டம்: செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது – போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம்
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற போராட்டக் களத்திற்கு வந்த செவிலியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகிம்சை முறையில் போராட்டம் நடத்த வந்த செவிலியர்கள் மீது போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கைது நடவடிக்கையின் போது, கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்காமல் போலீசார் நடந்துகொண்டதாக செவிலியர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். மனிதாபிமானம் இல்லாத இந்த அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அமைதியான முறையில் போராடும் தங்களை இப்படித்தான் நடத்துவதா என அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக செவிலியர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

