சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – இன்று 71 இடங்களில் ஏற்பாடு
சென்னையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் நோக்கில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (டிசம்பர் 15) நடத்தப்பட்டு வருகின்றன.
நகரில் உள்ள 15 மண்டலங்களிலும் இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. மழைக்காலத்தில் பரவும் காய்ச்சல், வைரஸ் தொற்று, சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு உடனடி சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் வகையில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக இன்று 71 இடங்களில் வடகிழக்கு பருவமழைக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. முகாம்களில் மருத்தவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை, மருந்துகள் மற்றும் சுகாதார ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
மழைக்கால நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற பொதுமக்கள் இந்த முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

