சென்னையில் 49-வது புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் YMCA திடலில்
சென்னை:
சென்னையில் நடைபெற உள்ள 49-வது புத்தகக் கண்காட்சி, நந்தனம் YMCA திடலில் ஜனவரி 8ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தக ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இந்த கண்காட்சி, தினசரி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலான நூல்கள், கல்வி, இலக்கியம், குழந்தைகள் புத்தகங்கள், போட்டித் தேர்வு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்த புத்தகக் கண்காட்சி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

