சீர்காழியில் வேல் வடிவ ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில், மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது.
வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஆலய மண்டலத்தில், புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை மற்றும் ஸ்ரீ வேல்முருகன் சுவாமிக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனம் நடத்தப்பட்டது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். நிகழ்வின் இறுதியில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
