ஜனநாயகன் கிளைமாக்ஸ் குறித்து விஜய் கொடுத்த ஸ்பெஷல் இன்புட்ஸ்!
நடிகர் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் இரண்டு மாதங்களில் திரையரங்குகளைச் சூடேற்ற உள்ள நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் குறித்து நடிகர் விஜய் தனிப்பட்ட முறையில் இயக்குநர் ஹெச். விநோதுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் முடிந்தவுடன் ரசிகர்கள் திரையரங்கில் இருந்து மகிழ்ச்சியுடன் வெளியேற வேண்டும் என்பதே விஜயின் முக்கிய விருப்பமாக கூறப்படுகிறது.
ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் உணர்ச்சிகரமாக மாற்றும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, எண்டு கார்டு வரும் முன்பாக ஒரு எமோஷனல் எடிட் வீடியோவை சேர்க்கலாமா என்ற யோசனையில் குழு தற்போது தீவிரமாக ஆலோசிக்கிறது. இந்த யோசனையை விஜயும் வரவேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ‘தளபதி கச்சேரி’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் படத்தின் அடுத்த சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திரைப்படத்தின் வியாபாரமும் பல்வேறு மண்டலங்களில் துள்ளலாக முன்னேறி வரும் நிலையில், ஜனநாயகனைச் சுற்றியுள்ள அப்டேட்கள் ரசிகர்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகின்றன. Vijay ரசிகர்களின் மனதில் நீண்ட நேரம் நிற்கும் உணர்ச்சிகரமான முடிவை வழங்கும் நோக்கத்திலேயே கிளைமாக்ஸ் மாற்றங்கள் செய்யப்படுவதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

