தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு கடும் நிபந்தனைகள்!
தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு புதுவை காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதுவையைச் சேர்ந்த ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் க்யூ ஆர் கோடு அனுமதி சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் முதியோருக்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு கடுமையான நிபந்தனைகளை புதுவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

