இன்று தங்கம் விலையில் சிறிய சரிவு: சவரன் ரூ.98,800
சென்னை: தங்கம் விலையில் இன்று சற்று குறைவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,320 குறைந்து ரூ.98,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.4 குறைந்து ரூ.211-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உலக சந்தை நிலவரம் மற்றும் உள்நாட்டு தேவை ஆகிய காரணங்களால் தங்கம், வெள்ளி விலைகளில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

