சென்னை விமான நிலையத்தில் விரைவில் ஸ்மார்ட் ட்ராலிகள்

சென்னை விமான நிலையம் இனி ஸ்மார்ட் ட்ராலிகளுடன் பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்ப வசதி, பயணிகளுக்கு விமான நிலையத்திற்குள் கடைகளில் ஷாப்பிங் செய்யவும், உணவகங்களில் சாப்பிடவும் உதவும். இந்த ஸ்மார்ட் ட்ராலிகள் , பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் . இவை சிறிய, தொழில்நுட்பம் நிறைந்த வண்டிகள். இவற்றில் ஒரு திரை பொருத்தப்பட்டிருக்கும். பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை இந்த திரையில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்தவுடன், விமானம் புறப்படும் நேரம், எந்த கேட் செல்ல வேண்டும், அந்த கேட் எங்கே இருக்கிறது போன்ற தகவல்கள் திரையில் தெரியும்.

இந்த ட்ராலிகளில் உங்கள் கைப்பெட்டிகளையும் வைத்துக்கொண்டு எளிதாக செல்லலாம். இந்த புதிய வசதியால், விமான நிலையத்தில் பயணிகளுக்கு நேரமும் சிரமமும் மிச்சமாகும்.“ஒரு ஸ்கேன், ஒரு ட்ராலி , இனி பயணம் சுலபம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *