தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: சவரன் ரூ.94,400-ஐ எட்டியது!
சென்னை:
சர்வதேச சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கமாக, தங்கம் விலை நாட்டில் மீண்டும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்ற-இறக்க நிலையை சந்தித்து வருகின்றன.
நவம்பர் 24-ஆம் தேதி சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,520 எனவும், சவரன் ரூ.92,160 எனவும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.171 ஆக இருந்தது.
அதன்பிறகு, நவம்பர் 25-ஆம் தேதி தங்கம் விலையில் திடீர் உயர்வு பதிவானது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.11,720 ஆனது. இதன்மூலம் சவரன் விலை ரூ.1,600 அதிகரித்து ரூ.93,760 ஆகியது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.174 என மூன்று ரூபாய் உயர்ந்தது.
இந்த நிலை தொடர்ந்துள்ள நிலையில், இன்று (நவம்பர் 26) தங்கம் விலையில் மேலும் ஏற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.94,400 என விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து இன்று தங்கம் ரூ.11,800 ஆகியுள்ளது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.176 என்ற அளவை எட்டியுள்ளது.
இதனால், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.94 ஆயிரத்தை கடந்துள்ளது, இது நுகர்வோரிடையே மீண்டும் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளது

