போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது வாலிபர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் 21 வயது கவியரசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளியை “பாலியல் குற்றவாளி” என கருதி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதன் படி, சிறையில் இருக்கும் கவியரசன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.